பிரதேச செயலகங்களின் சேவைக் கிளைகள்
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு
பிரதேச செயலாளர் |
||
![]() |
பெயர் |
திருமதி கே.எச்.ஐ. சடமாலி திலகரத்னா
|
| வேலை வரலாறு |
|
|
உதவி பிரதேச செயலாளர் |
||
![]() |
பெயர் | திருமதி D.M.U.H. விந்தியா திஸாநாயக்க |
| வேலை வரலாறு |
|
|
|
கணக்காளர் |
||
![]() |
பெயர் | திருமதி.பீ.எம்.எச்.பாலசுரிய |
| வேலை வரலாறு |
|
|
|
உதவி இயக்குநர் (திட்டமிடல்) |
||
![]() |
பெயர் |
திருமதி ஆர்.பி.என். சம்பிக்கா |
| வேலை வரலாறு |
|
|
|
நிர்வாக அதிகாரி |
||
| பெயர் | ||
| வேலை வரலாறு | ||
நிர்வாக அலுவலர் (கிராம உத்தியோகத்தர்) |
||
![]() |
பெயர் | திரு பீ.எம்.ஜெி.பஸ்நாயக்க |
| வேலை வரலாறு |
|
|
எமது நோக்கு
நிலைபேறான அபிவிருத்தியின் மூலம் முன்மாதிரி பிரதேச செயலகம்எமது செயற்பணி
அரச கொள்கைகளுக்கு இணங்க பண்டுவஸ்நுவர பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களின் சமூக , பொருளாதார மற்றும் ஆன்மீக அபிவிருத்தியை அடைவதற்காக சுற்றாடலைப் பாதுகாப்பதுடன் மனித வளம், நிதிவளம் மற்றும் பௌதிக வளங்களை சிறப்புடனும் வினைத் திறனுடனும் செயற்படுத்தி நடவடிக்கை எடுத்தல்.
நிறுவனத்தின் வரலாறு
பண்டுவஸ்நுவர கிழக்கு பிரதேச செயலகம் கடுபொத நகரிலிருந்து குளியாப்பிட்டி பாதையில் 7 கி.மீ. தொலைவில், குருணாகல் - குளியாப்பிட்டி பாதையில் அமைந்திருக்கும் ஹொரம்பாவ சந்தியிலிருந்து ஹொரம்பாவ பாதையில் 13 கி.மீ தொலைவில், குளியாப்பிட்டி - ஹெட்டிபொல பாதையில் மூணமல்தெனிய சந்தியிலிருந்து கடுபொத பதையில் 7.5 கி.மீ. தொலைவில், ஹெட்டிபொல நாரம்மல பாதையில் 7.5 கி.மீ. தொலைவில் மாவிஎல எனும் ஊரில் அமைந்துள்ளது.
வடக்கு மற்றும் மேற்குத் திசையில் பண்டுவஸ்நுவர , தெற்குத் திசையில் குளியாப்பிட்டி கிழக்கு , கிழக்குத் திசையில் பமுணாகொடுவ மற்றும் வாரியபொல முதலான பிரதேச செயலகங்ளை எல்லைகளாகக் கொண்டு இவ்வலுவலகம் அமைந்துள்ளது. இப் பிரதேச செயலகப் பிரிவு 104.6 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது.
பண்டுவஸ்நுவர பிரதேச செயலகப் பிரிவிற்கு உரிய 39 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கலாக 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நிகதி இவ் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. கோறளை எனக் கருதும் போது அங்கமு கோறளை முழுவதுமாகவும், வடக்கு யடிகஹ , திஸ்ஸவ மற்றும் கிராதலான முதலிய கோறளைகளின் பகுதிகள் உள்ளடங்கும் வண்ணம் இப் பிரிவு நிர்மாணிக்கப்படுள்ளது. கமநல சேவை அதிகாரப் பிரிவுற்கு இணங்க 8 கிராம அலுவலர் பிரிவுகள் மூணமல்தெனிய கமநல சேவைப் பிரிவற்கும் ,6 கிராம அலுவலர் பிரிவுகள் பண்டுவஸ்நுவர கமநல சேவை பிரிவிற்கும் ,25 கிராம அலுவலர் பிரிவுகள் கனோகம கமநல சேவை பிரிவிற்கும் உள்ளடங்குகிறது. .2014.01.01ஆம் திகதி முதல் பண்டுவஸ்நுவர கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உரிய 3 கிராம அலுவலர் பிரிவுகள் பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
விவசாயப் பிரதேசம் என கருதப்படும் இப் பிரதேச செயலகப் பிரிவில் நெல் மற்றும் தெங்கு பிரதான பயிர்களாகும் . விவசாய மற்றும் பாரம்பரிய வலயமாகக் கருதும் போது கீழ் நில இடைவலய எல் 3 இற்கும் எல் 4 இற்கும் எல்லையாக அமைந்துள்ளது. இங்கு வருடாந்த மழை வீழ்ச்சி 35 - 40 மில்லி மீற்றருக்கு இடைப்பட்டதாகும் . இப் பிரதேச செயலக பிரிவில் 30 பெரிய குளங்களும் 10 ஏக்கருக்கு குறைந்த சிறிய குளங்களும் அமைந்துள்ளன . நெற் செய்கை பிரதானமாக இருப்பினும் 50 ஏக்கருக்கு மேற்பட்ட குளம் ஒன்று மட்டுமே உள்ளது. .குளத்து நீர் போதாமையினால் மழை வீழ்ச்சி நெற் செய்கையின் வீழ்ச்சிக்கு ஏதுவான பிரதான காரணம் ஆகும் . நெற் செய்கை பிரதானமாக ஒரு போகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நெற் செய்கைக்கு மேலதிகமாக வெற்றிலை ,மரக்கறி, வாழை , நிலக்கடலை, கிழங்கு முதலான பயிர்ளைப் பயிரிடுவதில் விவசாயிகளுக்கு ஆர்வம் இருப்பினும் நீர்ப் பற்றாக்குறை அவர்களைப் பெரிதும் பாதித்துள்ளது. பொருளாதாரத்தை நோக்கும் போது இப்பிரதேசத்தில் விவசாயம் பிரதானமாக இருப்பினும் கால்நடை வளர்ப்பு வேறு சிறு கைத்தொழில் மற்றும் கூலி வேலை முதலான தொழில்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரியக் கைத்தொழிலாக மட்பாண்டக் கைத்தொழிலும் சிறு கைத்தொழிலாக செங்கல் உற்பத்தி,தெங்கு சார்ந்த உற்பத்தி மற்றும் கல் உடைப்பு போன்றவை உள்ளன.
இப்பிரிவின் முழு சனத்தொகை 33045 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 17222 , ஆண்களின் எண்ணிக்கை 15823 ஆகும். மத விவகாரங்களில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இப்பிரதேசத்தில் இலங்கையின் சிங்கள அரசனான பண்டுவஸ்தெவ் எனும் அரசன் வாழ்ந்ததாக சாட்சிகள் உள்ளன. இப்பிரிவில் அமைந்திருக்கும் மத ஸ்தலங்களின் எண்ணிக்கை 43 ஆகும் . பெளத்த வணக்கஸ்தலங்களின் எண்ணிக்கை 38, கத்தோலிக்க வணக்கஸ்தலங்களின் எண்ணிக்கை 02, கிறிஸ்தவ தேவாலயம் 01, முஸ்லிம் வணக்கஸ்தலம் 01,எனும் வகையில் வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ளன.
2005 ஆம் வருடத்தில் இருந்து சேவை புரிந்த பிரதேச செயலாளர்கள்
| பெயர் | இருந்து | வரை |
|
எம்.டீ.எஸ்.பெலிகொல்ல |
2005 | 2011 |
|
எஸ்.எம்.பெத்தாவடு |
2011 | 2016 |
|
பீ.டீ.ஆர்.டீ.தர்மவர்தன |
2016 | 2019 |
| திருமதி டி.எச்.எம்.என்.பி.தசநாயக்க (வேலை) | 2019 | 2020 |
| டி.பி.எஸ்.ஜே டி சொய்சா | 2020 | இப்பொழுது வரை |
2018 ஆம் வருடத்தில் அங்கீகாிக்கப்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் நிரந்தர உத்தியோகத்தர்கள:
| பதவி | அங்கீகாிக்கப்பட்ட | நிரந்தரம் | பதவி வெற்றிடம் |
| பிரதேச செயலாளர் | 01 | 01 | - |
| உதவி பிரதேச செயலாளர் | 01 | 01 | - |
| கணக்காளர் | 01 | 01 | - |
| உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்) | 01 |
01 | - |
| நிருவாக உத்தியோகத்தர் | 01 |
- | 01 |
| நிருவாக உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தர்) | 01 | - | 01 |
| உதவி மாவட்ட பதிவாளர் | 01 |
01 | - |
| அரச முகாமைத்துவ சேவை | 26 |
22 | 04 |
| தொழில் நுட்ப உத்தியோகத்தர் | 02 |
01 | 01 |
| அபிவிருத்தி இணைப்பாளர் | 01 |
01 | - |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் | 11 |
32 | - |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் (அபிவிருத்தி) | 45 |
45 | - |
| கிராம உத்தியோகத்தர் | 36 |
23 | 13 |
| தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப உதவியாளர் (அபிவிருத்தி ) | 01 | - | 01 |
| தொழில் நுட்ப உதவியாளர் | 01 | 01 | - |
| சாரதி | 02 | 02 | - |
| அலுவலக உதவியாளா் | 06 | 05 | 01 |







































