எமது நோக்கு

நிலைபேறான அபிவிருத்தியின் மூலம் முன்மாதிரி பிரதேச செயலகம்
 

எமது செயற்பணி

அரச கொள்கைகளுக்கு இணங்க  பண்டுவஸ்நுவர பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களின் சமூக , பொருளாதார மற்றும் ஆன்மீக அபிவிருத்தியை அடைவதற்காக சுற்றாடலைப் பாதுகாப்பதுடன் மனித வளம், நிதிவளம் மற்றும் பௌதிக வளங்களை சிறப்புடனும் வினைத் திறனுடனும் செயற்படுத்தி நடவடிக்கை எடுத்தல்.

நிறுவனத்தின் வரலாறு

பண்டுவஸ்நுவர கிழக்கு பிரதேச செயலகம் கடுபொத நகரிலிருந்து குளியாப்பிட்டி பாதையில் 7 கி.மீ. தொலைவில், குருணாகல் - குளியாப்பிட்டி பாதையில் அமைந்திருக்கும் ஹொரம்பாவ சந்தியிலிருந்து ஹொரம்பாவ பாதையில் 13 கி.மீ தொலைவில், குளியாப்பிட்டி - ஹெட்டிபொல பாதையில் மூணமல்தெனிய சந்தியிலிருந்து கடுபொத பதையில் 7.5  கி.மீ.  தொலைவில், ஹெட்டிபொல நாரம்மல பாதையில் 7.5  கி.மீ. தொலைவில் மாவிஎல எனும் ஊரில் அமைந்துள்ளது.

வடக்கு மற்றும்  மேற்குத்  திசையில்  பண்டுவஸ்நுவர , தெற்குத்  திசையில்  குளியாப்பிட்டி கிழக்கு ,  கிழக்குத் திசையில் பமுணாகொடுவ மற்றும் வாரியபொல  முதலான பிரதேச செயலகங்ளை எல்லைகளாகக் கொண்டு  இவ்வலுவலகம் அமைந்துள்ளது. இப் பிரதேச செயலகப் பிரிவு 104.6 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது.

பண்டுவஸ்நுவர  பிரதேச செயலகப் பிரிவிற்கு உரிய  39 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கலாக 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நிகதி இவ் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. கோறளை  எனக் கருதும் போது அங்கமு கோறளை முழுவதுமாகவும், வடக்கு யடிகஹ , திஸ்ஸவ மற்றும் கிராதலான முதலிய கோறளைகளின் பகுதிகள் உள்ளடங்கும் வண்ணம்  இப் பிரிவு நிர்மாணிக்கப்படுள்ளது. கமநல சேவை அதிகாரப் பிரிவுற்கு இணங்க 8 கிராம அலுவலர் பிரிவுகள் மூணமல்தெனிய கமநல சேவைப் பிரிவற்கும் ,6 கிராம அலுவலர் பிரிவுகள் பண்டுவஸ்நுவர கமநல சேவை பிரிவிற்கும் ,25 கிராம அலுவலர் பிரிவுகள்  கனோகம கமநல சேவை பிரிவிற்கும் உள்ளடங்குகிறது. .2014.01.01ஆம் திகதி முதல் பண்டுவஸ்நுவர கிழக்கு பிரதேச செயலகப்  பிரிவிற்கு உரிய 3 கிராம அலுவலர் பிரிவுகள் பண்டுவஸ்நுவர மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

விவசாயப் பிரதேசம் என கருதப்படும் இப் பிரதேச செயலகப் பிரிவில் நெல் மற்றும் தெங்கு பிரதான பயிர்களாகும் . விவசாய மற்றும்  பாரம்பரிய  வலயமாகக் கருதும் போது கீழ் நில இடைவலய எல் 3 இற்கும் எல் 4 இற்கும் எல்லையாக அமைந்துள்ளது. இங்கு வருடாந்த மழை வீழ்ச்சி 35 - 40 மில்லி மீற்றருக்கு இடைப்பட்டதாகும் . இப் பிரதேச செயலக பிரிவில் 30 பெரிய குளங்களும் 10 ஏக்கருக்கு குறைந்த சிறிய குளங்களும் அமைந்துள்ளன . நெற் செய்கை பிரதானமாக இருப்பினும் 50 ஏக்கருக்கு மேற்பட்ட குளம் ஒன்று மட்டுமே உள்ளது. .குளத்து நீர் போதாமையினால் மழை  வீழ்ச்சி நெற் செய்கையின் வீழ்ச்சிக்கு ஏதுவான பிரதான காரணம் ஆகும் . நெற் செய்கை பிரதானமாக ஒரு போகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நெற் செய்கைக்கு மேலதிகமாக வெற்றிலை ,மரக்கறி, வாழை , நிலக்கடலை, கிழங்கு முதலான பயிர்ளைப் பயிரிடுவதில் விவசாயிகளுக்கு ஆர்வம் இருப்பினும் நீர்ப் பற்றாக்குறை அவர்களைப் பெரிதும் பாதித்துள்ளது. பொருளாதாரத்தை    நோக்​கும் போது இப்பிரதேசத்தில் விவசாயம் பிரதானமாக இருப்பினும் கால்நடை வளர்ப்பு வேறு சிறு கைத்தொழில் மற்றும் கூலி வேலை முதலான தொழில்களில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரியக் கைத்தொழிலாக மட்பாண்டக் கைத்தொழிலும் சிறு கைத்தொழிலாக செங்கல் உற்பத்தி,தெங்கு சார்ந்த உற்பத்தி மற்றும் கல் உடைப்பு போன்றவை உள்ளன.

இப்பிரிவின் முழு சனத்தொகை 33045 ஆகும். பெண்களின் எண்ணிக்கை 17222 ,  ஆண்களின் எண்ணிக்கை 15823 ஆகும். மத விவகாரங்களில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இப்பிரதேசத்தில் இலங்கையின் சிங்கள அரசனான பண்டுவஸ்தெவ் எனும் அரசன் வாழ்ந்ததாக சாட்சிகள் உள்ளன. இப்பிரிவில் அமைந்திருக்கும் மத ஸ்தலங்களின் எண்ணிக்கை 43 ஆகும் . பெளத்த வணக்கஸ்தலங்களின் எண்ணிக்கை 38, கத்தோலிக்க  வணக்கஸ்தலங்களின் எண்ணிக்கை 02, கிறிஸ்தவ தேவாலயம் 01, முஸ்லிம் வணக்கஸ்தலம் 01,எனும் வகையில் வணக்கஸ்தலங்கள் அமைந்துள்ளன.

 

2005 ஆம் வருடத்தில் இருந்து சேவை புரிந்த பிரதேச செயலாளர்கள்

பெயர் இருந்து வரை

எம்.டீ.எஸ்.பெலிகொல்ல

2005 2011

எஸ்.எம்.பெத்தாவடு

2011 2016

பீ.டீ.ஆர்.டீ.தர்மவர்தன

2016 2019
திருமதி டி.எச்.எம்.என்.பி.தசநாயக்க (வேலை) 2019 2020
டி.பி.எஸ்.ஜே டி சொய்சா 2020 இப்பொழுது வரை

News & Events

03
ஜன2023
2023 இல் கடமை ஆரம்பம்

2023 இல் கடமை ஆரம்பம்

2023 இல் கடமை ஆரம்பம்      ...

09
நவ2022
ஹெல வெடதுரு மொபைல் கிளினிக்

ஹெல வெடதுரு மொபைல் கிளினிக்

ஹெல வெடதுரு மொபைல் கிளினிக் படுவாஸ்நுவர கிழக்கு பிராந்திய...

குடியுரிமை சாசனம்

News & Events

03
ஜன2023
2023 இல் கடமை ஆரம்பம்

2023 இல் கடமை ஆரம்பம்

2023 இல் கடமை ஆரம்பம்                  

09
நவ2022
ஹெல வெடதுரு மொபைல் கிளினிக்

ஹெல வெடதுரு மொபைல் கிளினிக்

ஹெல வெடதுரு மொபைல் கிளினிக் படுவாஸ்நுவர கிழக்கு பிராந்திய செயலக மக்களின் சுகாதார நிலையை பரிசோதிக்கவும், தற்போதுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெறவும் ஆயுர்வேத மருத்துவ மனை ஒன்று 03.11.2022 அன்று மகுலகம ஆயுர்வேத பாதுகாப்பு சபையில் நடைபெற்றது. இங்கு எலும்பு முறிவு, பொது நோய்கள், மூல நோய், அமிலத்தன்மை, சர்க்கரை நோய், மூட்டுவலி போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பங்கேற்றவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.      ...

குடியுரிமை சாசனம்

Scroll To Top