சிவில் பதிவுகள்
1.பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்றுக் கொடுத்தல்
2.காலம் தாழ்த்தி பிறப்புக்களை பதிவு செய்தல். ( பிறப்பு மூன்று மாதங்களுக்குப் பிறகும்)
3.காலம் தாழ்த்தி இறப்புக்களை பதிவு செய்தல். ( இறந்து மூன்று மாதங்களுக்கு பிறகும் )
4.பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்த்தல் / மாற்றுதல் (21 வயதிற்கு கீழ், 21 வயதிற்கு மேல்)
5.பிறப்பு சான்றிதழ் பத்திரத்தின் தகவல்களை மாற்றுதல்/ உட்புகுத்தல்/ கைவிடுதல் (தாயின் தகவல் / தந்தையின் தகவல்)
6.பிரதேசத்தினுள் காணப்படும் பதிவு செய்யப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திருமணங்களை பதிவு செய்தல்
7.காரியாலயத்தினுள் திருமண பதிவினை மேற்கொள்ளல் .
சிவில் பதிவுகள்
தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்
(புதிய தேசிய அடையாள அட்டை -.ஆ.ப.தி 1 , தேசிய அடையாள அட்டையின் போலி /பிரதியொன்றைப் பெற்றுக்கொள்ளல்- ஆ.ப.தி 8 )
1.வயது 50 க்கும் மேற்பட்டதாயின் பிறப்புச் சான்றிதழ் அல்லது அனுமான வயதுச் சான்றிதழ் இல்லாவிடில் ஆவணங்களை சோதனையிடல் முடிவுகளுடன் மாற்று ஆவணங்கள் வழங்கப் படல் வேண்டும்.
2.அவையாவன
3.பாடசாலையிலிருந்து விலகுதல் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ,விண்ணப்பதாரரின் பிறந்த திகதியில் அமைந்த வேறொரு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் , பிறப்புச் சான்றிதழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பு , தோட்டத்த (எஸ்டேட்) விட்டு விலகும் சான்றிதழ், கடவுச்சீட்டின் தேவையான பக்கங்களின் பிரதி ,தோட்ட /எஸ்டேட் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்ட பதிவு அட்டை,)
4.தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக முதல் முறையாக விண்ணப்பிப்பவராயின் விண்ணப்பதாரியின் தந்தை / தாய் / பாதுகாவலர் தேசிய அடையாள அட்டையின் கிராம உத்தயோகத்தர் சான்றுப்படுத்திய பிரதி.
5.கணவரின் பெயரை இணைத்துக் கொள்வதற்காக திருமண சான்றிதழ்
6.புத்த பிக்குகளுக்கான சாமனேர சான்றிதழ் அல்லது ஒரு உபசம்பதா சான்றிதழ்
7.அடையாள அட்டையில் தான் வகிக்கும் பதவி குறிப்பிடப் படவேண்டுமாயின் 3 மாதங்களுக்குள் சேவையில் இருப்பதாக பெறப்பட்ட சான்றிதழ்.
8.காணாமல் போன அடையாள அட்டை தொடர்பாக பொலீஸ் புகாரின் அசல் நகல் பிரதிகள்
9.திருத்தப்பட்ட அடையாள அட்டையாயின் தற்போது பயன்படுத்தப்படும் அடையாள அட்டை
10.முத்திரைகள், வயது. 16 - 17 ரூ. 3 / =, வயது. 17 க்குமேல் ரூ. 13 / = திருத்தம் மற்றும் காணாமல் போன அடையாள அட்டை தொடர்பாக ரூ. 15 / =
12.முறையான வாக்குமூலம் முத்திரையுடன் (தேவைப்பட்டால்)
பிறப்புச் சான்றிதழில் பெயர் இணைத்தல் மாற்றுதல்
7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு7 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
- கிறிஸ்துவ சான்றிதழ் மாணவர்.
- செயற்பாட்டு அறிக்கை.
- செய்தித்தாள் விளம்பரம்.
- வங்கி புத்தகம்
- தேசிய / அஞ்சல் அடையாள அட்டை.
- திருமண சான்றிதழ்.
- அரசாங்க அல்லது பிற நிறுவனங்களில் இருந்து பெறப்படும் அறிக்கை.
மேற்குறிப்பிட்டவற்றுல் குறைந்தது மூன்று ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
அதற்குமேலதிகமாக
- விண்ணப்பம்
- திருத்தப்பட வேண்டிய அசல் பிறப்புச் சான்றிதழ்.
- இரு பெயர்ளும் ஒருவர் என பிரதேச செயலாளரின் மேலொப்பத்துடன் கிராம உத்தியோகத்தரின் பின்குறிப்பும்.
பெயரை மாற்றுபவர் 21 வயதிற்கு குறைந்தவராயின் , அந்த அறிக்கையை பெற்றோர் / பாதுகாவலர் சமர்ப்பிக்க வேண்டும். புதிய பெயரை குறைந்தது ஒரு வருடம் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. 7 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு
- திருத்தப்பட வேண்டிய பிறப்புச் சான்றிதழின் அசல் பிரதி.
- பெற்றோரின் திருமண சான்றிதழ்.
- தாய் / தந்தையின் தேசிய அடையாள அட்டை.
- தந்தை மற்றும் தாய் ஆட்சேபனை இல்லை என்று உறுதிப்படுத்தும் சத்தியக் கடதாசி.
இந்த அறிவிப்பு குழந்தையின் பெற்றோர் / பாதுகாவலரின் மூலம் ஒப்படைக்கப் பட வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க திங்கட்கிழமைகளில் அல்லது புதன்கிழமைகளில் மாத்திரம் வருகை தரவும்
பிறப்புச் சான்றிதலில் தந்தையின் பாட்டனின் பகுதியிலல் மற்றும் பிறப்புச் சான்றிதழில் திருமணமானவர் என்பதை சேர்த்தல் திருத்தல்
- திருத்தப்பட வேண்டிய பிறப்புச் சான்றிதழின் அசல் பிரதி.
- தந்தையின் பிறப்புச் சான்றிதழின் அசல் பிரதி.
- பெற்றோரின் திருமணச் சான்றிதழின் அசல் பிரதி.
- தாய் / தந்தையின் தேசிய அடையாள அட்டையின் நகல் பிரதி.
காலம் தாழ்த்திய பிறப்புக்களின் பதிவுகள்
- பிறப்பு தொடர்பான விளக்கம். (அசல் நகல் பிரதிகள்)
- தடுப்பூசி அட்டையின் நகல் பிரதி.
- பெற்றோர் திருமணம் செய்து கொண்டால், திருமணச் சான்றிதழ்.
- பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் அசல் பிரதிகள்.
- தாய் மற்றும் தந்தையின் தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகள்.
- பிறப்பு 1 வருடத்திற்கு குறைவாக இருந்தால், 50 ரூபாய் முத்திரை
- பிறப்பு 1 வருடத்திற்கு மேல் என்றால் 100 ரூபா முத்திரை
- மேலே உள்ள ஆவணங்களுடன் பெற்றோர் குழந்தையுடன் மாவட்ட பதிவாளர் பிரிவுக்கு செல்லவும்
காலம் தாழ்ந்திட்ட இறப்புக்களின் பதிவுகள்
மருத்துவமனையில் இறந்தால், மருத்துவமனை மரணச் சான்றிதழின் அசல் பிரதி
- கிராம உத்தியோகத்தரின் சான்றிதழ்
- கண்டனம் / இறப்பு விளம்பரங்கள்
- மரணபெட்டிக்கான பண ரசீது
- மதசடங்கு பற்றி தலைமை மதகுருவின் கடிதம்
- மரணம் 1 வருடத்திற்கும் குறைவாக இருந்தால்
- ரூ .50 முத்திரை, மரணம் இடம் பெற்று 1 வருடத்தை விட அதிகமாக இருந்தால் ரூ .100 முத்திரை
- அறிவிப்பவரின் பிறப்புச் சான்றிதழ் / திருமண சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையின் பிரதி
- மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் திங்கட்கிழமை அல்லது புதன்கிழமை மாவட்ட பதிவாளர் பிரிவுக்கு செல்லவும்.















